சாமானிய மக்களை குறிவைக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்: பிரபலமாகும் BNPL திட்டம் !

சாமானிய மக்களின் வருமானத்தை குறிவைக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் புதிய திட்டம்.

Update: 2021-08-10 13:22 GMT

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அதிகளவிலான தள்ளுபடி அளிக்கப்படுவது மட்டும் அல்லாமல் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான தொகைக்குக் கடன் மூலம் பொருட்களையும், சேவைகளையும் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்தச் சில வாரத்தில் பண்டிகை கால விற்பனை துவங்க உள்ள காரணத்தால் அனைத்து முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களும் BNPL திட்டத்தை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் விரிவாக்கம் செய்து வருகிறது. 


இ-காமர்ஸ் நிறுவனங்கள் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் உட்படப் பல நிறுவனங்கள் இந்தப் பண்டிகை காலத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்களும், வர்த்தகத்தையும் BuyNow PayLater (BNPL) திட்டத்தின் மூலம் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. பண்டிகை கால வர்த்தகம் முதல் கொரோனா அலை முடிந்த பண்டிகை காலகட்டத்தில் இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் வரலாறு காணாத வர்த்தகத்தைப் பெற்று மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளனர்.  


பெரும்பாலும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் நாணயமான உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த BNPL திட்டத்தை அளிக்கும் காரணத்தால் நிதியியல் நிறுவனங்களுக்கும் தங்கள் கடனாக அளிக்கும் பணத்தைத் திரும்பப் பெறுகின்றனர். இந்தியாவில் BNPL திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தத் திட்டம் கடந்த 18 மாதத்தில் 1.5 பில்லியன் டாலர் முதல் 2 பில்லியன் டாலர் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input: https://m.economictimes.com/tech/newsletters/morning-dispatch/rise-of-bnpl-amid-regulatory-ambiguity-cloudtail-to-shut-down/articleshow/85196143.cms

Image courtesy: economic times 







Tags:    

Similar News