செயற்கைக்கோள் மூலம் இன்டர்நெட் சேவை அளிக்கும் திட்டம்: விரைவில் வெளியிடப்படுமா ?

செயற்கைகோள் மூலம் இன்டர்நெட் சேவை அளிக்கும் திட்டம் மத்திய அரசின் புதிய கொள்கை.

Update: 2021-08-22 13:35 GMT

செயற்கைக்கோள் மூலம் இன்டர்நெட் அளிக்கும் சேவை என்பது, நேரடியாக இண்டர்நெட் இணைப்பு. இந்தச் சேவையைப் பெற வாடிக்கையாளர் அதாவது மக்களுக்கு எவ்விதமான கேபிள் இணைப்பும், நெட்வொர்க் இணைப்பும் தேவையில்லை. விண்ணில் இருக்கும் செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இண்டர்நெட் இணைப்பைப் பெற முடியும். அதிவேக இண்டர்நெட் இதேபோல் 24 மணிநேரமும் எவ்விதமான தொழில்நுட்ப கோளாறு இல்லாமல் அதிவேக இண்டர்நெட் சேவையை அனைவராலும் காடு, மலை என அனைத்து இடத்திலும் பெற முடியும். 


இத்தகைய சேவைக்காகவே தற்போது மத்திய அரசு 'ஸ்பேஸ்காம் கொள்கை' விரைவில் வெளியிட உள்ளது. விண்வெளி துறை விரைவில் அனைத்து விதமான கணக்கீடுகள் மற்றும் நிர்வாக விதிமுறைகள், கண்காணிப்புக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை உருவாக்கிய உடனே கொள்கைகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக குறிப்பிட படுகிறது. இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு இந்த சேவை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 


100% அன்னிய முதலீடு செயற்கைக்கோள் மூலம் இண்டர்நெட் சேவை அளிக்கும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு 100% அன்னிய முதலீடுகளை அட்டோமேட்டிங் ரூட்டில் அனுமதிக்கும் என்றும், இந்த அறிவிப்பு தான் ஸ்பேஸ்காம் கொள்கையில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. விண்வெளி துறை மேலும் இந்தச் சேவைக்கு டெலிகாம் துறை அல்லாமல் விண்வெளி துறை தான் உரிமம் வழங்குவது. இதுவும் ஸ்பேஸ்காம் கொள்கையில் மிக முக்கியமானதாக உள்ளது. 

Input: https://m.economictimes.com/industry/telecom/telecom-new

Image courtesy: economic times 


Tags:    

Similar News