இ-காமர்ஸ் நிறுவனத்தின் வட்டியில்லா கடன்: சில்லறை வியாபாரிகளுக்கு கிடைக்குமா ?
இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்டு தற்போது வட்டியில்லாக் கடன்களை, சில்லரை வியாபாரிகளுக்கு வழங்கியுள்ளது.
நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்டு நிறுவனம் சின்னஞ்சிறிய வியாபாரிகளுக்கு உதவும் வகையில் ஒரு அசத்தலான திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும், தெருவோர சில்லறை பெட்டிக் கடைகள். இந்த சிறிய கடைகள் பலவிதமான மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் கொண்டுள்ள கடைகள். வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களைப் பெற இந்த கடைகள் மூலம் தங்களின் சேவைகளை இணைந்து ஃபிளிப்கார்டு நிறுவனம் வழங்கி வருகின்றது.
புதிய கடன் திட்டம் இதற்கான கடை உரிமையாளர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து தங்கள் நிறுவனத்துடன் பார்ட்னர்களாக இணைந்துள்ளது ஃபிளிப்கார்ட் நிறுவனம். இந்த நிலையில் தற்போது இந்த சில்லறை விற்பனையாளர்களுக்கு உதவும் வகையில் கடன் வழங்குவதற்கான புதிய கடன் திட்டத்தினை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. எவ்வளவு கடன் கிடைக்கும்? இதற்காக பிளிப்கார்ட் நிறுவனம் IDFC ஃபர்ஸ்ட் பேங்க் உடன் இணைந்துள்ளது. பிளிப்கார்டின் இந்த கடன் திட்டத்தின் மூலம் 5,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். அதுவும் 14 நாட்கள் வரை வட்டி இல்லாத காலத்துடன் கடன் வழங்கப்படவுள்ளது.
வளர்ச்சியினை ஊக்குவிக்கும் பிளிப்கார்ட்டின் இந்த திட்டம் தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையின் தலைவருமான ஆதர்ஷ் மேனன் கூறுகையில், "பிளிப்கார்ட் மொத்த விற்பனையில் எங்களது முக்கியக் குறிக்கோள் சில்லறை விற்பனையாளர்களுக்கு வணிகத்தை எளிதாக்குவதும், அவர்களின் வளர்ச்சியினை ஊக்கப்படுத்துவதும் தான். மிகப்பெரிய சவால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிரானாக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நிதி நெருக்கடி தான். ஆக இந்த நெருக்கடியை போக்க, இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.
Image courtesy:news18