வருமானவரி தளத்தில் நடந்த கோளாறு: கூடுதல் அவகாசம் கைகூடுமா ?
இன்போசிஸ் உருவாக்கிய புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் கோளாறு ஆகியவற்றின் காரணமாக வரி கட்டுபவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு சாதகமா?
இன்போசிஸ் உருவாக்கிய புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றின் காரணமாக மத்திய நிதியமைச்சகம் வருமான வரி செலுத்த மக்களுக்குக் கூடுதலான கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாத சம்பளம் வாங்குவார்கள் முதல் அனைத்து தரப்பினரும் வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாளாக இருந்த ஜூன் 30ஆம் தேதியை மேலே குறிப்பிட்ட காரணத்திற்காகச் செப்டம்பர் 30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வருமான வரித் தளத்தில் இன்னும் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் மீண்டும் இக்கால அளவீடுகள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இதுகுறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். 2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை செப்டம்பர் 30க்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் 5000 ரூபாய் விதிக்கப்படும்.
5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் அளவிலான அபராதம் விதிக்கப்படும். 5 லட்சத்துக்கு மேல உங்க வருமானம் இருந்தா கண்டிப்பா வருமான வரி கட்டணும். ரிட்டர்ன்ஸ் ஃபைல் பண்ண வேண்டும். எனவே வருமான வரி தாக்கல் செய்ய தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள கால அவகாசம் மக்களுக்கு சாதகமாக உள்ளது. நோய் தொற்று காரணமாக பல்வேறு கடன் பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் மக்களுக்கு இந்த கால நீட்டிப்பு நிச்சயம் சாதகமாகத்தான் இருக்கும்.
Image courtesy:livemint