இந்தியாவில் நிதி பற்றாக்குறையின் தீர்வாக அமையுமா? தேசிய பணமாக்கல் திட்டம் !
இந்திய பொருளாதாரத்தில் எதிர்கொண்டு வரும் நிதி பற்றாக்குறை தீர்வு காணும் விதமாக தேசிய பணமாக்கும் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசு அரசின் சார்பாக தற்பொழுது தேசிய பணமாக்கல் திட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள். அதாவது குறிப்பாக இதுவரை அரசின் வசம் இருந்த சாலை, மின்சார உற்பத்தி தளங்கள், விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற பலவற்றைத் தனியார் நிறுவனங்கள் இடம் குத்தகை முறையில் விற்பனை செய்து 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை நிதி திரட்ட உள்ளதாக அறிவித்தது. ஆனால் இத்திட்டம் மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்கள் அனைத்தும் நீண்ட கால அடிப்படையில் குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும் என்றும், இந்தச் சொத்துக்களின் உரிமை அரசிடம் மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இந்த 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டல் மூலம் நிதிப் பற்றாக்குறை பிரச்சனையை எளிதாகத் தீர்க்க முடியும். தேசிய பணமாக்கல் திட்டம் நிதிப் பற்றாக்குறை பிரச்சனை இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக நாட்டின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருந்ததால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அளவு கடந்த நிதியாண்டில் 9.3% இருந்தது. தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 6.8% குறைக்க முடியும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிப் பற்றாக்குறை அளவு மோசமான நிலையை அடையும் எனப் பல பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்த நிலையில், தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் இப்பிரச்சனையைச் சரி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் பல கோடி MSME நிறுவனங்கள் பலன் அடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவுகளும் மதிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Image courtesy:money control