இந்திய பொருளாதாரம் இனிவரும் காலங்களில் வரலாறு காணாத உச்சத்தை அடையும் !

இந்திய பொருளாதாரத்தில் நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் உச்சத்தை அடையும் என நிபுணர்கள் குழு கணித்துள்ளார்கள்.

Update: 2021-08-31 14:02 GMT

தற்போது இருக்கும் நோய் தொற்று காலத்தில் இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. எனவே அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதுதான் ஒவ்வொரு நாளும் மீண்டும் வருகிறது. அந்த வகையில், இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் வரலாற்று உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையைப் பிரதிபலிக்காது எனவும் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்திய பொருளாதார வளர்ச்சி வரும் காலாண்டில் 20% வரையில் வளர்ச்சி அடையும் என ரெயூட்டர்ஸ் தளத்தில் 40 பொருளாதார வல்லுனர்கள் இணைந்து கணித்துள்ளனர். 


இதேபோல் SBI வங்கியின் அறிக்கையில் நாட்டின் பொருளாதார இக்காலகட்டத்தில் 18.5% வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணித்துள்ளது. ரிசர்வ் வங்கி கணிப்பு மேலும் ரிசர்வ் வங்கி வரும் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 26.2 சதவீதத்தில் இருந்து 21.4 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதேபோல் இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சி கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் -24.4 சதவீதம் வரையில் சரிந்தது.


குறைந்த அளவு மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டு இதை ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் பொருளாதாரம் 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனக் கணிக்கப்படுகிறது. இது குறைந்த அளவு மதிப்பீட்டை அடிப்படையிலான வளர்ச்சி தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வளர்ச்சி அளவீடுகளை வைத்து நாட்டின் வளர்ச்சி அளவீட்டை முழுமையாகக் கணிக்க முடியாது. இருந்தாலும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இனிவரும் காலங்களில் உயர்வு அடையும் என்று நிபுணர்கள் தற்போது கணித்துள்ளார்கள்.

Input:https://economictimes.indiatimes.com/news/newsblogs/india-q1-gdp-news-live-updates-31-aug-2021/liveblog/85784913.cms

Image courtesy:economic times




Tags:    

Similar News