ஆன்லைன் பரிவர்த்தனைகளின் புதிய விதிமுறைகள்: RBI அறிவிப்பு !

இனி மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை புதிய விதிமுறைகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா(RBI) வெளியிட செய்தது.

Update: 2021-08-26 13:49 GMT

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை RBI அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு ஆன்லைன் பரிவர்த்தனையின் போதும், 16 இலக்க எண், CVV எண், காலாவதி தேதி ஆகிய அனைத்தும் கொடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய நடவடிக்கையின்போது, வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட தகவல்களை சேவை நிறுவனங்கள் சேமிக்க கூடாது என்று கூறி உள்ளது. 


இது முன்னதாக ஒரு வாடிக்கையாளர் CVV நம்பரையும், அவர்கள் அலைபேசிக்கு வரும் OTP-யையும் கொடுத்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இனி டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் உள்ள தகவல்கள் அனைத்தும் கொடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முக்கியம் ஒரு புறம் இதனால் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது தாமதமாகலாம் என்றாலும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆக ரிசர்வ் வங்கியின் இந்த பாதுகாப்பு அம்சம் பொருந்திய இந்த அறிவிப்பானது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக நடக்கும் மோசடிகளை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


இந்த புதிய நடைமுறையானது ஜனவரி 2022 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக அதன் பிறகு இன்றைய நாளில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் ஆன்லைன் சில்லறை விற்பனை அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனையும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக அதிக பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஆக இதன் மூலம் பல மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஆக ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது மேற்கொண்டு குற்றங்களை குறைக்க வழிவகுக்கலாம். 

Input:https://www.indiatoday.in/business/story/rbi-data-storage-guidelines-is-it-time-for-you-to-remember-16-digit-card-numbers-and-details-heres-why-1844226-2021-08-23

Image courtesy:India Today


Tags:    

Similar News