ஆப்கானிஸ்தான்: இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் கைப்பற்றிய தலிபான்களின் இந்தியப் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்துள்ளனர்.

Update: 2021-08-19 13:30 GMT

தற்பொழுது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் இந்தியாவில் சார்பில் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது. தூதரை வாபஸ் பெறுவதாக இந்தியா அறிவித்தது. இதைத்தொடர்ந்து தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டனர். தூதரை வாபஸ் பெற்றதால் தலிபான்களுக்கு இந்தியா மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தற்பொழுது தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்துள்ளனர்.  


மேலும் இது குறித்து இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அஜய் ஷகாய் கூறுகையில், "இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு சர்க்கரை, தேயிலை, காபி, மசாலா பொருட்கள், துணி வகைகள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆப்கானிஸ்தானில் இருந்து பழ வகை உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது தலிபான்கள் இந்தியாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கிறார்கள். இனிமேல் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே நடக்கும் பல வர்த்தக உறவு மிகவும் மோசமான நிலையில் தற்பொழுது இருக்கிறது. 


ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவைகள் தற்பொழுது தலிபான்களால் தடைப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர் பழங்களில் 80% ஆப்கானிஸ்தானில் இருந்துதான் வந்தது. தலிபான்களின் தடையால் இனி அவை அங்கிருந்து வராது. எனவே, இவற்றின் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இந்தியாவில் அதிகமாக உள்ளது" என்றும் அவர் கூறினார். 

Input:https://www.india.com/news/india/taliban-stops-export-imports-from-india-says-exporters-body-4898345/

Image courtesy:India news 


Tags:    

Similar News