இந்திய பொருளாதாரக் கனவை நினைவாக்க பட்ஜெட்டில் கவனம் தேவை!

இந்தியாவின் பொருளாதார கனவை நினைவாக்க 2022- பட்ஜெட்டில் இந்த பகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.

Update: 2022-01-10 13:58 GMT

வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டம் அல்லது பட்ஜெட் இந்தியாவை முன்னோக்கி அணிவகுத்துச் செல்லவும், வரும் ஆண்டுகளில் அதன் திறனை முழுமையாக வெளிப்படுத்தவும் வடிவமைக்கப்பட வேண்டும். இந்தியாவிற்கு இருக்கும் பெரிய இலக்குகளை அடைய சில பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒருபுறம், 2025 ஆம் ஆண்டிற்குள் $5-ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற லட்சியம், மறுபுறம் இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நோய்தொற்று வழக்குகளுக்கு மத்தியில் ஏற்படும் ஊரடங்கு மற்றும் விநியோக இடையூறுகள் ஏற்படும் அபாயத்தை சரி செய்யும் பொறுப்பை நிதி அமைச்சகம் தற்பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.


 அடுத்த பட்ஜெட் ஆண்டிற்கான அதன் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட அந்நிய நேரடி முதலீடு (FDI), சொத்துப் பணமாக்குதல் மற்றும் முதலீடுகளை திரும்பப் பெறுதல் ஆகியவற்றின் மூலம் நிதி ஓட்டத்தை அதிகரிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். தற்பொழுது மேலும் SME மற்றும் MSME உள்ளிட்ட பல துணைத் தொழில்களில் துளிர்விடும் விளைவைக் கொண்ட, பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உற்பத்தி, ஜவுளி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளை மேம்படுத்துவது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.


வரவுள்ள 2022ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் மேற்கண்ட துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் Moneycontral செய்தி வெளியிட்டுள்ளது. வளர்ச்சியை அதிகரிக்க, நமது பொருளாதாரத்திற்கு முதலீடுகள் தேவை. முதலீடு FDI அல்லது உள்நாட்டு சேமிப்பை மூலதனமாக பொருளாதாரத்திற்கு மாற்றுவதன் மூலம் வரலாம். அனைத்து நிதிச் சொத்துக்களிலும் முதலீடு செய்வதற்கான, வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான வரம்பை ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக அதிகரிப்பது இந்த திசையில் சாதகமான படியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:Moneycontral


Tags:    

Similar News