10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வர்த்தக விற்பனை உச்சம்: CAIT அறிக்கை !

அந்த கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வர்த்தக விற்பனை உச்சம் அடைந்துள்ளதாக CAIT அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-11-07 14:02 GMT

கடந்த 2 வருடத்தில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையில் கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தீபாவளி பண்டிகை பெரிய அளவில் உதவியுள்ளது. இந்த வருடம் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் இது 10 வருட உச்சம் அடைந்துள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு(CAIT) தற்போது அறிவித்துள்ளது.


2021 அன்று தீபாவளி விற்பனை மற்றும் வர்த்தகம் நினைத்ததை விடவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் மக்கள் நீண்ட காலமாகப் பெரிய அளவில் கொண்டாடுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்திருந்த நிலையில் இந்தத் தீபாவளி பண்டிகையின் போது பெரிய அளவில் பயன்படுத்தியுள்ளனர் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளில் குறைந்திருந்த நிலையில் தற்போது தீபாவளி போது அதிகளவிலான வர்த்தகங்கள் சந்தையில் ஏற்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவே 1.25 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்துடன் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வைத் தொட்டு உள்ளது.


மேலும் இந்த வருடத்தின் தீபாவளி விற்பனை ஒரு லட்சம் கோடி இருக்கும் என்று ஏற்கனவே அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கணித்திருந்தது. இதேபோல் இந்த வருடத்தின் முடிவிற்குள் மக்களின் மொத்த செலவின அளவுகள் 3 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தொடும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. எதிர்பார்த்ததை விட இந்த வருடம் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது என்று கூறலாம்.

Input & Image courtesy:Hindustantimes


Tags:    

Similar News