நேரடி விற்பனை தொழில்களின் விதிகள் மாற்றம்: பண சுழற்சி முறை ரத்து!
நேரடி விற்பனை தொழில்களில் இனி பல சுழற்சி முறை கிடையாது.
நேரடி விற்பனை தொழில்களை நடத்தி வரும் நிறுவனங்கள் டப்பா்வோ், ஆம்வே போன்ற நிறுவனங்கள் இனி, பண சுழற்சி முறையை பின்பற்ற முடியாது. மேலும் அது தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான நேரடி விற்பனை நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் மிகப்பெரிய பயன்களை அடைந்து வருகின்றன. இந்த திட்டத்தை தடை செய்ததை தொடர்ந்து இன்னும் மூன்று மாதங்களுக்குள் இத்தகைய நிறுவனங்கள், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
இந்தத் திட்டம் பிரமிட் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பலரையும் கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டு தொழில்களில் மேலும் லாபம் அடையும் ஒரு முறையை இதுவாகும் மேலும் இத்தகைய நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் பொருட்களுக்கு இனி வாக்குறுதி அளிக்க வேண்டும். அதாவது உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. எனவே இதன் மூலம் விற்பனையாளர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப் படுவதாகவும் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இணையதளம் மூலமாக விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 தற்போது திருத்தி அமைக்கப்பட்டு 2021 இதில் நேரடி விற்பனை தொழில்களும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது. எனவே இணையதளம் மூலமாகவும் அல்லது நேரடி விற்பனை தொழில்கள் மூலமாகவும் நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு தக்க பாதுகாப்பு நுகர்வோர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலமாக இனி நுகர்வோர் குறைகள் 48 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
Input & Image courtesy: The Hindu