ஓய்வூதியதாரர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க தேதி நீட்டிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு!
பாதுகாப்புத் துறை சார்பில் ஓய்வூதியதாரர்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியத்தை முறையாக வழங்க மத்திய அரசு அறிவுறுத்தல்.
தற்போது ஓய்வூதியம் என்பது மத்திய மாநில அரசுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டிற்குப் பின் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியமும், அதற்கு முன்புவரை பழைய ஓய்வூதிய திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வுதியம் மாதம் சரியாக கொடுக்கப் படுகிறதா? என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. எனவே அந்த வகையில் தற்போது பாதுகாப்புத்துறை சார்பில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் எனக்கு குறையக ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமார் 1.2 லட்சம் ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஆண்டு அடையாளத்தை சரிவர பூர்த்தி செய்யவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அவ்வாறு மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் சரியாக நடைபெறாது குறிப்பாக பாதுகாப்பு துறை சார்பில் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஆண்டு அடையாளம் மற்றும் வாழ்நாள் சான்றிதழை வரும் 25-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மே 17-ம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை சரி செய்ததில், 43,774 பயனாளர்கள் தங்களின் சரியான விவரங்களை ஆன்லைன் மூலமாகவோ? அல்லது வங்கிகள் வழியாகவோ சரிவர தாக்கல் செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே அவர்களுக்கான கால அவகாசம் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு உரிய ஆவணங்களை வரும் 25-ம் தேதிக்குள் முறையாக சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Input & Image courtesy:News 18