அக்னிபாத் திட்டம்: இளைஞர்களுக்கு ஆயுதப் படையில் வேலைவாய்ப்பு வழங்கும்!

ஆயுதப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் அக்னிபாத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.

Update: 2022-06-14 23:25 GMT

ஆயுதப் படையில் பணி புரிய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்திற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் 'அக்னிபாத்'. குறிப்பாக இந்த அக்னி பாத் என்ற திட்டத்திற்கு பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் இந்த ஒரு திட்டம் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு முடிவுகளை எடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


ஆயுதப் படையில் இளைஞர்கள் அதிக அளவில் பணிபுரிய மற்றும் இளம் வீரர்களை ஆயுதப் படைகளின் மூலம் அவர்களை நாட்டில் சொத்தாக மாற்றுவதற்கு இந்தத் திட்டம் முக்கிய அங்கம் வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மட்டங்களின் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் பல்வேறு துறைகளில் புதிய திறன்கள் உடன் வேலை வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 


இந்தத் திட்டத்தின்படி சொத்து குறிப்பாக 17.5 முதல் 23 வயதுள்ள 45 பேர் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட கொண்டு உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்களில் தொடங்கும் என்றும் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவோர் அக்னி வீரர்கள் என்றும் அழைக்கப்படுவார். மேலும் ஆட்கள் தேர்வு செய்வதற்கு ஆன்லைன் மூலமாக நடக்கும் என்றும் ஆயுதப்படைக்கு வழக்கமான ஆண்கள் தேர்வு தகுதியை அக்னி வீரர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News