தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு !

தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் தற்போது ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

Update: 2021-09-09 13:45 GMT

மத்திய அரசு தொழிற்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விதமான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஜவுளித்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக 10,683 கோடி மதிப்பிலான திட்டத்தினை அறிவித்துள்ளது. வேலை வாய்ப்பு ஜவுளித் துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் விதமாகவும், 10,683 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி சார்ந்த மானிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் அரசின் இந்த திட்டம் மூலம் பல லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஜவுளித் துறையினரை ஊக்குவிக்கும் விதமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியினை அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி திட்டம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஜவுளி, தொழில் நுட்ப ஜவுளி பொருட்கள் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு இந்த திட்டத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.


அரசின் இந்த PLI திட்டத்தின் மூலம் அதிக மதிப்புள்ள தொழில் நுட்ப ஜவுளிகள் என உற்பத்தி செய்யப்படவுள்ளன. மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில், 13 துறைகளுக்கு 1.97 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்களை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மானிய திட்டமும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அரசின் இந்த PLI திட்டம் காரணமாக நாட்டின் குறைந்தபட்ச உற்பத்தி மதிப்பானது, 37.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவுளித் துறையில் பெரும்பாலான பெண்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அரசு இந்த திட்டத்தின் மூலம் பெண்களையும் ஊக்குவிக்கும். இதன் மூலம் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கினை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. 

Input & image courtesy:MoneyControl


Tags:    

Similar News