வங்கிகள் தனியார்மயமாக்கல் திட்டத்தை வேகப்படுத்தும் மத்திய அரசு !
வங்கிகள் தனியார்மயமாக்கல் திட்டத்தில் புதிய அம்சங்களுடன் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தற்போது மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக் கடன் பிரச்சினைகள் காரணமாகப் பெரும் சுமைகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரு திட்டத்தை நீண்ட நாட்களாக ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் பணிகளை வேகப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் முக்கியமான விஷயத்தை ஆளுநர் ஆலோசனை செய்து வருகிறது மத்திய அரசு.
பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை வேகப்படுத்தும் நடவடிக்கையாக, அதிகப்படியான தொகையை இதன் மூலம் பெற வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு புதிய கட்டமைப்பை ரிசர்வ் வங்கியிடம் முன்வைத்துள்ளது. பொதுத்துறை வங்கி விற்பனை இதற்கு முன்பு பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் இத்துறையில் இருக்கும் மற்றொரு இந்திய வங்கி அல்லது இந்தியாவில் இயங்கும் நிறுவனத்திற்குத் தான் விற்பனை செய்ய முடியும். எனவே இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டும் இத்தகை வாய்ப்புகளை தராமல் வெளிநாட்டு இதை நிறுவனங்களுக்கும் இதை பகிர்ந்து அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
எனவே இத்தகைய புதிய திட்டத்தின்படி தற்போது மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி நிறுவனங்களும், வெளிநாட்டு வெல்த் பண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்க முடியும். இதற்கான விதி தளர்வுகள் குறித்துத் தான் தற்போது ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்த அனுமதியை ரிசர்வ் வங்கி அளிக்க முடியுமா? என்பதற்கான பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையைத் தற்போது மத்திய அரசு துவங்கியுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்கும் நிலையில் ஸ்ரீராம் பைனான்ஸ், சோழமண்டலம் பைனான்ஸ் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளைக் கைப்பற்ற முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Input & Image courtesy:Times of India