மத்திய அரசின் அசத்தலான முதலீடு திட்டம்: அனைவருக்கும் நன்மை பயக்குமா?

மத்திய அரசு வெளியிட்டுள்ள முதலீடு திட்டத்தில் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாக பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Update: 2021-11-17 13:21 GMT

நாம் சம்பாதித்த பணத்தை சேமிப்பதற்கு முதலீடு செய்தால் மட்டுமே இதைச் சாத்தியப்படுத்த முடியும். அந்த வகையில் மத்திய அரசு 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் ஒரு முக்கியமான முதலீட்டில் திட்டத்தில் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற முடியும். மேலும் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி சலுகையும் கிடைக்கிறது. எனவே மத்திய அரசு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு சிறப்பான முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் இதுவும் ஒன்று. 


மத்திய அரசு முதலீட்டுத் திட்டங்கள் மக்களுக்குப் பல விதமான முதலீட்டுத் திட்டத்தைக் கொடுத்தாலும், மாத சம்பளக்காரர்களுக்கு ஏற்ற வகையில் வருமான வரி சலுகையோடு கொடுக்கக் கூடிய சில முக்கியமான திட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் திட்டம்(PPF) தான். பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் PPF என்று சுருக்கமாக அழைக்கப்படும். பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு 500 ரூபாய் முதல் அதிகப்படியாக 12, 500 ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் 1.5 லட்சம் ரூபாய் தொகைக்கு முழுமையான வருமான வரிச் சலுகை உள்ளது. 


வருடம் மட்டுமே பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் திட்டத்திற்கு 15 வருடம் மட்டுமே முதிர்வு காலம், ஆனால் நம்முடைய 1 கோடி ரூபாய் இலக்கை அடைய இந்த 15 வருடம் போதாது. ஆனால் பிஎப் திட்டத்தில் 5 ஆண்டுகள் வீதம் முதிர்வு காலத்தை நீட்டிக்க முடியும். அதாவது 15 வருட முதிர்வு காலத்திற்குப் பின் 20 வருடம், 25 வருடம் என நீட்டிக்க முடியும். 100 சதவீதம் பாதுகாப்பு கொண்ட இந்தப் பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் திட்டம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பொதுத்துறை வங்கிகள் முதல் தபால் நிலையங்களிலும் இத்திட்டத்தை முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. 

Input & Image courtesy: Zeebiz



Tags:    

Similar News