சீனாவின் நிலக்கரி பற்றாக்குறை ! இந்திய உற்பத்தி நிலையங்களுக்கு கிடைத்த வாய்ப்பு !

சீனாவின் மிகப் பெரிய நிலக்கரி பற்றாக்குறை இந்திய உற்பத்தி நிலையங்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகும்.

Update: 2021-10-18 13:01 GMT

தற்போது உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு முக்கிய நகரங்களில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது. இதனால் சீனாவின் பல உற்பத்தி நிறுவனங்கள் மின்சார பற்றாக் குறையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில்தான் உற்பத்தியானது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மின்வெட்டு நீடித்தால் சீனாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடும் நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக, சர்வதேச நாடுகள் பலவும் அவதிப்பட்டு வருகின்றன. 


சீனாவில் நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக, கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது. நிலக்கரி பற்றாக்குறை சீனா தனக்குத் தேவையான நிலக்கரிக்கு மற்றொரு அண்டை நாடான ஆஸ்திரேலியாவை எதிர் நோக்கி இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ரீதியாக ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு மத்தியில், சீனாவுக்கு தற்போது நிலக்கரி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கோல்ட்மேன் சாக்ஸ் எச்சரிக்கை பற்றாக்குறைக்கு மத்தியில் மின் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 8.2 சதவிகிதத்திலிருந்து, 7.8 சதவீதமாக இந்த ஆண்டு குறையும் என்றும் எச்சரித்துள்ளது. 


சீனாவின் இத்தகைய சிக்கல் ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் சீனாவின் இந்த சிக்கல்கள் இந்தியாவிற்கு நல்லதொரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் கெமிக்கல் வர்த்தகம் மற்றும் இரும்பு உற்பத்தி துறைக்கு இது மிகப்பெரிய நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தேவை அதிகரிப்பு கடுமையான மின்வெட்டு மத்தியில் சீனாவின் பல தொழிற்சாலைகள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய நிறுவனங்களுக்கு மிகச் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.  

Input & Image courtesy:Economictimes

 


Tags:    

Similar News