கொரோனா தாக்கத்தினால் கிராமத்தை நோக்கிச் செல்லும் நகர மக்களின் வாழ்க்கை !

தற்போது உள்ள கொரோனா தாக்கத்தினால், கிராமத்தை நோக்கிச் செல்லும் மக்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிறுவனங்கள்.

Update: 2021-09-06 13:04 GMT

பொதுவாகவே கிராமத்து மக்கள் தான் வேலைவாய்ப்புக்காகப் பெரு நகரங்களுக்குச் செல்வது வழக்கம். இது உலகம் முழுக்க நடக்கும் விஷயம். ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக நடந்து உள்ளது. குறிப்பாக இந்தக் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுக் கடைகள், வணிக வளாகங்கள், அலுவலகம் என அனைத்தும் மூடப்பட்டது. பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வரும் வேளையில், பலர் நகரத்தில் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் எப்போதும் இல்லாமல் நகரங்களில் இருந்து பெரும் பகுதி மக்கள் சொந்த ஊருக்கு அதாவது கிராமம் மற்றும் சிறு டவுன் பகுதிகளுக்கு வந்தனர். இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கை தலைகீழானது.  


வீட்டில் இருந்து தான் வேலை செய்யப்போகிறோம் என்பதால் அலுவலக ஊழியர்களுக்கும், வேலை இல்லாமல் தவித்த சாமானிய ஊழியர்கள் வேறு வழி இல்லாமல் சொந்த ஊருக்கு வந்தனர். கிராமம் மற்றும் ஊரகப் பகுதி பெரும் பகுதி மக்கள் கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு வந்த காரணத்தால் கிராம பகுதிகளில் வர்த்தகம் மற்றும் நகர்வு அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டதுகூறப்பட்டது. ஆனால் உண்மையில் ஊரகப் பகுதியில் நுகர்வு அளவில் பெரிய மாற்றங்கள் ஏதுவும் ஏற்படவில்லை என நிறுவனங்கள் கூறுகிறது.


இதனால் நகரங்களைக் காட்டிலும், கிராமத்தில்தான் சிறப்பான வளர்ச்சி அடைந்திருந்தது. மேலும் கன்டார் என்னும் அமைப்பு, கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வின்படி, 10 சதவீத குடும்பங்களில் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு வந்துள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் இவர்களின் மாதாந்திர நுகர்வு அளவில் எவ்விதமான மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர் எனக் கன்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Input:https://m.economictimes.com/news/economy/indicators/reverse-migration-didnt-spur-rural-consumption-say-companies/articleshow/85855362.cms

Image courtesy: economic times 


Tags:    

Similar News