இந்தியாவில் கிரிப்டோ பில் குறித்த முக்கிய முடிவு: முதலீட்டாளர்கள் மத்தியில் பதட்டம் !

இந்தியாவில் கிரிப்டோ பில் குறித்து, முக்கிய முடிவு முதலீட்டாளர்களை பதட்டமடைய செய்துள்ளது.

Update: 2021-12-15 13:11 GMT

உலக அளவில் மட்டுமல்லாது இந்தியாவிலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லாபம் அதிகமாக இருக்கும் என்று ஒரு காரணத்தினால் பல்வேறு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளையும் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த மத்திய அரசின் கிரிப்டோ மசோதா நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று ஏற்கனவே அரசு தரப்பில் கூறப்பட்டு இருந்தது.


 மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் மிக முக்கியமான மசோதாவாக இருந்த கிரிப்டோகரன்சி மசோதா மறு ஆய்வு செய்யப்பட்டுப் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தற்போதைக்கு இந்த மசோதா தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது.v அந்த அறிவிப்புக்கு பின் மத்திய நிதியமைச்சகம் பல முக்கியமான ஆலோசனைகளைச் செய்தது மட்டும் அல்லாமல் மொத்த கிரிப்டோ சந்தையும் ஒழுங்கு முறைப்படுத்தச் செபி மற்றும் RBI உடன் இணைந்து செயல்படத் துவங்கியது.


இந்தச் சூழ்நிலையில் கிரிப்டோ வல்லுனர்களும், கிரிப்டோ முதலீட்டாளர்களும் விரைவில் கிரிப்டோ மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாத என்று கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு ரீடைல் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் மீண்டும் கிரிப்டோகரன்சி முதலீட்டைத் தடை செய்யப்படுமா? என்ற பயத்தையும் உருவாக்கியுள்ளது.

Input & Image courtesy:Economic times


Tags:    

Similar News