ஓமிக்ரான் வைரஸ் தாக்குதல்: கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நிலைமை!

ஓமிக்ரான் தாக்குதலுக்குப் பிறகு, கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நிலை என்ன?

Update: 2021-12-16 13:53 GMT

தற்போது கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் அச்சத்தின் மத்தியில், அடுத்து பங்கு சந்தைகள் என்னவாகுமோ? என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகள் நிலை என்னவாக இருக்குமா? என்ற கேள்வி சர்வதேச அளவில் இருந்து வருகின்றது. ஏனெனில் இன்று கிரிப்டோகரன்சிகளில் முதன்மை கரன்சியாக இருந்து வரும் பிட்காயின் மதிப்பானது ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் 10,000 டாலர் சரிவில் காணப்பட்டது. இந்த கரன்சிகளில் முதலீடு என்பது நிலையானது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


 மறுபுறம் ஓமிக்ரான் அச்சமும் சந்தையில் இருந்து வருகின்றது. இதுவும் காரணமாக இருக்கலாம் என்ற யூகம் இருந்து வருகின்றது. பெருகி வரும் ஆதரவு சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆதரவுகள் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் கிரிப்டோவுக்கு எதிரான எச்சரிக்கைகளும் வந்து கொண்டு தான் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்தான மசோதா விரைவில் தாக்கம் செய்ய பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


 இதன் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகம், இந்தியாவில் ஓழுங்கு படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியா போல ஒவ்வொரு நாடும் ஒழுங்குபடுத்தினால் நிச்சயம் ஒரு பெரும் மாற்றம் இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்துகளை கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் பிட்காயின் தற்பொழுது இருந்து 70.84% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

Input & Image courtesy:News 18


Tags:    

Similar News