இனி இந்தியாவில் பிட்காயின் அங்கீகரிக்கப்படுமா? மத்திய அரசு முடிவு இதுதான் !

கிரிப்டோகரன்சியான பிட்காயினை இந்தியாவில் ஒரு நாணயமாக அங்கீகரிக்கும் திட்டமில்லை என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

Update: 2021-11-29 13:33 GMT

மக்களவையில் பிட்காயின் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவர்கள் மத்திய அரசின் சார்பாக தற்பொழுது பதிலை அளித்துள்ளார். மேலும் இந்தியாவில் பிட்காயினில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்களையும் அரசு சேகரிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார். எனவே அரசு தலையிடாது எந்த ஒரு நடவடிக்கைகளிலும் அனுமதிக்க முடியாது என்பதை கூறியுள்ளார். கடந்த 2008ம் ஆண்டில் அடையாளம் தெரியாத குழுக்களால் பிட்காயின் சர்வதேச சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டது. வங்கிகள் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தலையீடுகள் ஏதும் இல்லாமல், அங்கீகரிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் பொருட்கள், சேவை பெறவும் பணப் பரிமாற்றத்துக்கும் பிட்காயின் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.


அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி ஆகவே கடந்த சில ஆண்டுகளாகவே பிட்காயினில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. பிட்காயினில் வர்த்தகம் செய்வது, பரிமாற்றம் செய்வது என பலவும் அதிகரித்துள்ளது. இது குறித்து குளிர்காலக் கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த மசோதா மூலம் சில தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடை கொண்டு வரப்படலாம். அதன் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இதற்கிடையில் தான் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்க திட்டமில்லை என்றும் கூறியுள்ளார். ரிசர்வ் மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான எளிதான கட்டமைப்பை உருவாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பேங்க் ஆஃப் இந்தியா என்று அவர் கூறியுள்ளார். 

Input & Image courtesy: News 18




Tags:    

Similar News