DAP உரத்தின் மானியத்தை 140 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசாங்கம்.!

புதன்கிழமை அன்று மத்திய அரசாங்கம், உரங்களில் விலை அதிகரிப்பில் இருந்து விவசாயிகளைக் காக்க டயம்மோனியம் பாஸ்பேட்(DAP) உரத்திற்கான மானியத்தை 140 சதவீதம் அதிகரித்துள்ளது.

Update: 2021-05-20 08:59 GMT

புதன்கிழமை அன்று மத்திய அரசாங்கம், உரங்களில் விலை அதிகரிப்பில் இருந்து விவசாயிகளைக் காக்க டயம்மோனியம் பாஸ்பேட்(DAP) உரத்திற்கான மானியத்தை 140 சதவீதம் அதிகரித்துள்ளது.




 DAP உரத்திற்கான மானியம் ஒரு மூட்டைக்கு 500 ரூபாயில் இருந்து 1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவானது ஆண்டுதோறும் விவசாயிகளுக்குச் செலவிடப்படும் உர மானியத்தில் 80,000 கோடியில் இருந்து கூடுதலாக 14,775 கோடி செலவாகும்.

இந்த முடிவானது உரங்களின் விலையுயர்வு குறித்துப் பேசப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

"சர்வதேசளவில் அம்மோனியா போன்றவற்றின் விலை உயர்ந்ததால் உரங்களின் விலை அதிகரித்து வருவது குறித்துப் பேசப்பட்டது. சர்வதேச அளவில் உரங்களின் விலை உயர்த்தப்பட்டால், விவசாயிகள் குறைந்த அளவில் உரங்களைப் பெறுவதைப் பிரதமர் வலியுறுத்தினார்," என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு DAP விலை ஒரு மூட்டைக்கு 1700 ஆக இருந்தது. மத்திய அரசு மானியத்தை 500 ஆகியதைத் தொடர்ந்து 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. "சர்வதேச விலை உயர்வு காரணமாக தற்போது DAP உரத்தின் விலை 2400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அரசாங்கத்தின் மானியத்தைக் குறைக்கும் போது 1900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின் மூலம் விவசாயிகளுக்கு DAP ஒரு மூட்டை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுவதாகவும், விலை உயர்வின் தாக்கத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதில் உறுதியாகச் செயல்பட்டு வருவதாகவும் அந்த கூட்டத்தின் போது பிரதமர் தெரிவித்தார்.




 மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் PM-KISAN திட்டத்தின் கீழ் 20,667 கோடியை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தினார். இந்த உரங்களின் மானிய உயர்வானது, கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று பண்ணை சட்டங்களைப் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் எதிர்கொள்ளும் அதே வேளையில் எடுக்கப்பட்டுள்ளது.

Similar News