இந்தியாவில் இவ்வளவு கணக்கில், வேலையில்லா பட்டதாரிகள் உள்ளார்களா?
டிசம்பர் 2021 நிலவரப்படி இந்தியாவில் 53 மில்லியன் வேலையில்லாதவர்கள் உள்ளனர் என்று CMIE கணித்துள்ளது.
இந்தியாவில் டிசம்பர் 2021 நிலவரப்படி, சுமார் கிட்டத்தட்ட 53 மில்லியன் வேலையில்லாதவர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்(CMIE) தெரிவித்துள்ளது. இவர்களில், 35 மில்லியன் வேலையில்லாதவர்கள் வேலை தேடுகிறார்கள், 17 மில்லியன் பேர், வேலை செய்யத் தயாராக இருந்தாலும், அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று CMIE தெரிவித்துள்ளது. "வேலையின்மை விகிதத்தில் உள்ள 7.9% அல்லது 2021 டிசம்பரில் வேலை செய்யாத 35 மில்லியன் மக்களுக்கு இந்தியா உடனடியாக வேலை வழங்க வேண்டும்" என்று CMIE தனது வாராந்திர ஆய்வில் தெரிவித்துள்ளது.
வேலை செய்யாத மற்றும் வேலை கிடைத்தால் வேலை செய்யத் தயாராக இருக்கும் கூடுதல் 17 மில்லியன் பேருக்கு வேலை வழங்குவது முக்கியமான சவாலாகும் என்று அது மேலும் கூறியது. CMIE கருத்துப்படி, டிசம்பர் 2021 இல் தீவிரமாக வேலை தேடும் 35 மில்லியன் வேலையில்லாதவர்களில் 23% அல்லது 8 மில்லியன் பேர் பெண்கள். அதே நேரத்தில், செயலற்ற முறையில் வேலையில்லாமல் இருந்த 17 மில்லியன் பேரில், 53% அல்லது 9 மில்லியன் பெண்கள் தீவிரமாக வேலை தேடவில்லை என்றாலும், வேலை செய்யத் தயாராக உள்ளனர்.
"வேலை செய்யத் தயாராக இருக்கும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பெண்கள் ஏன் வேலைக்குச் சுறுசுறுப்பாக விண்ணப்பிக்கவில்லை? அல்லது வேலை தேடுவதில் வேறு முயற்சிகளை மேற்கொள்வதில்லை? என்பது ஆய்வுக்குரியது. வேலை கிடைக்காததா அல்லது பெண்கள் தொழிலாளர் வேலையில் சேருவதற்கு சமூக ஆதரவு இல்லாததா" என்று இரண்டு விதமான கேள்விகளையும் அந்த அமைப்பு முன்வைத்துள்ளது. "இந்தியாவின் வேலையின்மை பிரச்சனை அதன் வேலையின்மை விகிதத்தில் பிரதிபலிக்கவில்லை. அதன் பிரச்சனை குறைந்த வேலை வாய்ப்பு விகிதம் மற்றும் ஊக்கமிழந்த இளம் பெண் தொழிலாளர் சக்தியாகும்" என்று CMIE கூறியது.
Input & Image courtesy:Economic times