நீரிழிவுக்கு மலிவு விலையில் மாத்திரை - மோடி அரசின் அடுத்த அசத்தல் திட்டம்
நீரிழிவுக்கு மலிவு விலையில் மாத்திரை மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்தது.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8,700 க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த மருந்தகங்களில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் குறைந்த விலைகளில் மருந்துகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜெனரிக் மருந்து மாத்திரைகள், அதே மருந்து கொண்ட கம்பெனி விட மலிவான விலையில் விற்கப்படுகின்றன. இந்நிலையில் டைப் 2 நீரழிவுக்கு சிடாக் லிப்டின் என்று மாத்திரை மாத்திரையை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்து வைத்தது.
இந்த மாத்திரைகள் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் நீரழிவு நோயின் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களுக்கு சர்க்கரை நோய் என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது. சாதாரண மக்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை குணப்படுத்தும் மாத்திரைகள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அவற்றை தவிர்க்கும் விதமாக தற்போது 50 மில்லி கிராம் கொண்ட பத்து மாத்திரை அடங்கிய அட்டை 60 ரூபாய்க்கு விற்கப்படும். மேலும் 100 மில்லி கிராம் கொண்ட அம்மாதிரி அட்டையின் விலை ₹ 100 என்று மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது.
சிடாக் லிப்டின் மற்றும் பெட் மார்க்கிங் ஹைட்ரோ குளோரைடு இணைந்த கலவை மாத்திரைகள் ரூபாய் 65 மற்றும் ரூபாய்க்கு கிடைக்கும் என்று மத்திய அரசு மற்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை மாத்திரை கொண்டு கம்பெனி மாத்திரைகள் வெளியில் ரூபாய் 162 முதல் 285 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான மருந்துகளை கொடுக்கும் நோக்கில் மோடி அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News