தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவை பாராட்டிய பில்கேட்ஸ் - ஏன்?

தடுப்பூசி செலுத்துவதில் டிஜிட்டலில் சரியான முறையில் கையாண்ட மத்திய அரசை பில்கேட்ஸ் அவர்கள் பாராட்டியுள்ளார்.

Update: 2022-05-04 01:17 GMT

உலகளவில் பணக்காரர் பட்டியலில் எப்போதும் தனக்கு என்று ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர் பில்கேட்ஸ் அவர்கள். அவர் தற்போது கொரோனாவை பற்றி பிற நாடுகள் கையாண்ட விதத்தை பற்றி கூறினார். அந்த வகையில் இந்தியாவின் மத்திய அரசு டிஜிட்டல் முறையில் கொரோனா தடுப்பூசி குறித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார். மேலும் வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியின் போது இந்த கருத்தை அவர் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு உலக நாடுகளும் இந்த நோய்த்தொற்றை எவ்வாறு கையாண்டு பின்பு தற்போது இயல்பு நிலையை அடைந்துள்ளது என்பது பற்றி இந்த ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் உரையாட பட்டது. மேலும் பல்வேறு நாடுகளில் கையாண்ட வழிமுறைகள் பற்றியும் அவர் எடுத்துக் கூறினார். அந்த வகையில் இந்தியா நோய் தோற்று எவ்வாறு கையாண்டது மேலும் இந்தியாவில் இருக்கும் கிராமங்களுக்கு எப்படி இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பது குறித்தும் அவர் தன்னுடைய நேர்காணலில் கூறியிருந்தார்.


எனவே தொலைத் தொடர்புக்கு அப்பால் உள்ள கிராமங்களில் கூட மத்திய அரசு தன்னுடைய டிஜிட்டல் காரணிகளான ஆதார் கார்டு போன்றவற்றின் மூலமாக பல்வேறு நபர்களிடம் தடுப்பூசி செலுத்த வைத்துள்ளது. மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் கையாண்டு நோய் தொற்றை எதிர்த்து உள்ளது என்பது பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். முக கவசம் என்பது முக்கியமான ஒன்று அனைவரும் முக கவசம் அணிந்து நோய்த் தொற்றில் இருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Input & Image courtesy:Malaimalar News

Tags:    

Similar News