கடந்த ஆண்டைவிட 23 சதவிகிதம் அதிகரித்த நேரடி வரி வசூல் - அசைக்க முடியாத நிலையில் இந்திய பொருளாதாரம்

நடப்பு நிதியாண்டில் வரி வசூல் அதிகரித்துள்ளது.

Update: 2022-10-11 02:04 GMT

நடப்பு நிதியாண்டில் வரி வசூல் அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரையிலான ஆறு மாத காலகட்டத்தில் நேரடி வரிகள் மூலம் கிடைத்த வரி வசூல் 8 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இந்த 8 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்ததை விட 23.8% அதிகமாகும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக பொருளாதாரம் மந்தமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் போய்க்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Source - Polimer News 

Similar News