நேரடி வரி வருவாயில் உயர்வு - இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் பற்றிய தகவல்!
இந்தியாவின் நேரடி வரி வருவாய் வசூல் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் தற்பொழுது நோய்த் தொற்றுக்கு பிறகு உயர்வான வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் இதன் காரணமாக தற்பொழுது இந்திய பொருளாதாரம் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. அந்த வகையில் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும், நேரடி வரி வருவாய்(Income Tax) பொது இல்லாத வகையில் 14 லட்சம் கோடி அதிகமாக வசூல் ஆகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நேரடி வரி வருவாய் அதிகமாக வசூல் ஆகி இருப்பது மக்களின் பொருளாதார நிலைமை தற்பொழுது முன்னேற்றம் உள்ளது.
இந்தியாவின் நிகர நேரடி வரி வருவாய் வசூல் 14 லட்சம் கோடியை தாண்டி இருப்பதையும் மத்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்து உள்ளது. இதனை தொடர்ந்து நேரடி வரி வருவாய் குழுவில் தலைவர் பத்ரா அவர்கள் இது பற்றிக் கூறுகையில் தற்போது வசூலாகியுள்ளது வருவாய் கடந்த ஆண்டு வசூலாகி இருப்பதையும் காட்டிலும் 49% அதிகமாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ச்சியாக வரி வருவாய் வரும் நாட்களில் அதிகமாக இருப்பது என்பது நிதர்சன உண்மை தான்.
நோய்த் தொற்றுக்கு பிறகு தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து மக்களின் வருமானம் தற்போது முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இந்த பொருளாதாரத்தின் மேல் நிலை மக்கள் மிகுந்த முன்னேற்றத்தை அடைந்து விட்டார்கள். குறிப்பாக பொருளாதார உற்பத்தி, வணிகம் போன்ற துறைகளில் பெரும் அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.
Input & Image courtesy: Polimer News