பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பே கிடையாது: அடித்து செல்லும் நிதி அமைச்சர்!
இந்திய பொருளாதாரம் வந்த நிலைக்கு வாய்ப்பே கிடையாது என்று மத்திய நிதி அமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார்.
இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பே கிடையாது பூஜ்ஜியம் அளவிற்கு கூட அது செல்லாது என்றும், மாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவில் இரண்டு மடங்கு வளர்ச்சி காணும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறுகிறார். இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு மிக விரைவாக வளர்ச்சி அடைந்து இருக்கின்றது. பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியின் நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ளுகிறார்கள். இந்த நிதியாண்டி மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்வலாசிரியர் அவர்கள் கூறுகையில், "இந்த நிதியாண்டில் இந்தியாவின் இரட்டை இலக்க ஜிடிபி வளர்ச்சி நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது. சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியா வலுவான நிலையில் இருப்பதாகவும் பொருளாதாரத்தை இரண்டு அடுக்கு வளர்ச்சிக்கு கொண்டு செல்வது, தற்போது நோக்கமாக மத்திய அரசு கொண்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் இந்தியா மந்த நிலைக்கு செல்வதற்கு குறிப்பாக பூஜ்ஜியத்திற்கு செல்வதற்கு கூட வாய்ப்பு இல்லை என்றும் மாறாக நாம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்க சக்தியாக இருக்கும். இந்தியாவை விட வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் நாம் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்தியாவின் பொருளாதார நிலை தற்போது பல மடங்கு உயர்ந்து இருக்கின்றது என்று நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamani