இந்திய பொருளாதாரம் மட்டும் வளரவில்லை, வேலைவாய்ப்புகளும் பெருகிவருகிறது !

இந்தியாவில் பொருளாதார ரீதியாக மட்டும் இல்லாமல் குறிப்பாக இந்த ஆண்டு வேலை வாய்ப்புகளும் அதிகரித்து உள்ளது.

Update: 2021-10-08 13:14 GMT

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று உலக அளவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக பொருளாதார ரீதியான விஷயங்களில் இதன் தாக்கம் பெருமளவில் காணப்பட்டது உள்ளது என்றும் சொல்லலாம். அதிலிருந்து தற்பொழுது தான் இந்திய பொருளாதாரம் மீண்டு வருகின்றது.  இந்திய சந்தை வேகமாக மீண்டு வரும் நிலையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் பண்டிகை காலம் நெருங்கியுள்ள இந்நிலையில், தற்போது அனைத்து துறையிலும் அதிகளவிலான வர்த்தகம் உருவாக வாய்ப்பு உள்ளது. 


இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை அக்டோபர், டிசம்பர் காலாண்டில் 18 மாத உயர்வை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பு சந்தையில் இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு சேவை நிறுவனமான டீம்லீஸ் நடத்திய ஆய்வின் படி, 41% நிறுவனங்கள் டிசம்பர் காலாண்டில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளது. இது செப்டம்பர் காலாண்டு ஆய்வின் 38 சதவீத அளவீட்டை விடவும் அதிகமாகும். ஆனால் கடந்த இரண்டு காலாண்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருக்கும் காரணத்தால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தினமும் கிடைத்து வருகிறது. 


குறிப்பாக IT, கல்வி சேவை, ஈ-காமர்ஸ், டெலிகாம், உற்பத்தி, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் அடுத்த 3 மாதத்தில் உருவாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அனைத்து வர்த்தகத் துறையும் வேகமாகத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யதும், மேம்படுத்தியும் வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் இந்திய சந்தையில் அதிகரித்துள்ளது. பெரு நகரங்கள் மேலும் இந்த ஆய்வில் பங்கு பெற்ற 650 நிறுவனங்களில் பெரு நகரங்களில் இருக்கும் நிறுவனங்களில் 56 சதவீதம் அதிக ஊழியர்களை இந்த டிசம்பர் காலாண்டில் பணியில் சேர்க்க உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகிறது.

Input & Image courtesy:Times now news


 


Tags:    

Similar News