பொருளாதாரத்தில் காணப்படும் ஏற்ற, இறக்கங்கள்: ரிசர்வ் வங்கி அறிக்கை!
இந்திய பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றதா? ரிசர்வ் வங்கி கூறுவது என்ன?
உலகப் பொருளாதாரம் தொற்று நோயிலிருந்து மீளப் போராடிக் கொண்டிருக்கும்போதும், அரசியல் நெருக்கடியானது குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் உலகப் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் பொருளாதாரமும் சற்று ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. மறுபுறம், தேவை நிலைமைகளில் முன்னேற்றத்துடன் நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கை அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மேக்ரோ பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருக்கும் அதே வேளையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு எதிர்மறையான அபாயங்களை ஏற்படுத்துகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. "தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியானது, உலகப் பொருளாதாரம் தொற்று நோயிலிருந்து மீளப் போராடும் வேளையில், உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையைக்கு உயர்த்தியுள்ளது" என்று ரிசர்வ் வங்கி தனது 'பொருளாதார நிலை' அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நேரங்களுக்கு மத்தியில், தொற்றுநோயின் மூன்றாவது அலையிலிருந்து மீண்டு வருவதால், இந்தியப் பொருளாதாரம் சில இறக்கங்களை சந்தித்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி கூறியது. சில்லறை விற்பனை மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், மளிகை மற்றும் மருந்தகங்கள், பூங்காக்கள், பணியிடங்கள் மற்றும் போக்குவரத்து நிலையம் ஆகியவற்றில் நுகர்வோரின் பங்களிப்பு தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட அதிகமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Input & Image courtesy: Indian Express