பொருளாதாரம் அதிகரிப்பதால் ரியல் எஸ்டேட் தொழிலில் ஆர்வம் காட்டும் மக்கள் !

இந்தியாவில் தற்போது பொருளாதார நிலை சீராக இருந்து வருவதன் காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

Update: 2021-09-07 14:03 GMT

கடந்த சில நாட்களாக ரியல் எஸ்டேட் பங்குகள் உச்சம் தொட ஆரம்பித்துள்ளன. இத்துறை மீதான எதிர்பார்ப்பும் வலுத்து வருகின்றது. தற்போது வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. பொருளாதாரமும் மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனால் தேவையும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் காரணத்தினால், குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் ரியல் எஸ்டேட் மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளன. வரலாறு காணாத வட்டி குறைவு குடிசை வீடானாலும் சொந்த வீடாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய காலகட்டத்தில் பலரின் எண்ணமாக உள்ளது. 


ஏனெனில் வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. இதற்கு இடையில் தான் BSE ரியால்டி இன்டெக்ஸ் குறியீடு கடந்த ஐந்து நாட்களில் 10% ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் மட்டும் 35% ஏற்றம் கண்டுள்ளது. இந்த துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் காண இன்னும் ஏராளமான சாதகமான குறியீடுகள் சாதகமாக உள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் தற்பொழுது சாதகமான பல நன்மைகள் ஏற்பட தொடங்கி உள்ளன. அந்தளவுக்கு இந்த துறையில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன என்று ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. 


குறிப்பாக குறைவான வட்டி விகிதம், அரசு சப்போர்ட் உள்ளிட்ட பல காரணிகள் சந்தைக்கு சாதகமாக உள்ளன. ஐடி துறையில் வளர்ச்சி அதோடு ஐடி துறையில் பணியமர்த்தல் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சம்பள விகிதமும் அதிகரித்து வருகின்றது. இது இன்னும் குடியிருப்புக்காக ஊழியர்களை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய தூண்டலாம். நிபுணர்கள் இன்னும் வலுவான வளர்ச்சியினை காணலாம் என்று கூறி வருகின்றனர்.

Input:Mint

Image courtesy:livemint



Tags:    

Similar News