இந்திய பொருளாதாரத்தில் மின்சார பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்துமா?

இந்திய பொருளாதாரத்தில் மின்சார பற்றாக்குறை என்ற பிரச்சனை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

Update: 2021-10-15 13:23 GMT

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. எனினும் இந்தியாவில் பெரிய, பெரிய தொழிற்சாலைகள் மின்சாரத்தை நம்பித்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் மின்சார உற்பத்தியே பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை அடுத்து தொடர்ந்தால் உற்பத்தி தொழிற்சாலைகளுக்குக் கிடைக்கும் மின்சாரம் தடைபெறும். இதன் வாயிலாக நாட்டில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, விலைவாசி என அனைத்துமே பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


ஆசிய நாடுகள் சீனா உட்பட அனைத்து தென் ஆசிய நாடுகளிலும் தற்போது அதிகளவிலான நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நிலக்கரியின் விலை சுமார் 60 டாலரில் இருந்து 160 டாலராக அதிகரித்துள்ளது. விலை உயர்வோடு உற்பத்தியும் மந்தமான காரணத்தால் மின்சார உற்பத்தியும் தடைப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரி பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இந்தியாவில் மழை, வெள்ளம் போன்ற பல காரணத்தால் நிலக்கரி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும் அதிகரித்துள்ளது.


தொடர்ச்சியான விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் நேற்று வெளியான அறிவிப்பில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 20 தெர்மல் பவர் பிளான்ட் மூடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதியில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ள காரணத்தால் நிலக்கரி சுரங்கத்தில் அதிகளவிலான மழை நீர் புகுந்து உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 20 அனல் மின் நிலையம் மூடல் இந்தியாவில் நேற்று வெளியான அறிவிப்பில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 20 தெர்மல் பவர் பிளான்ட் மூடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இத்தகைய பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்தால் பொருளாதாரத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடகூடிய நிலை உருவாகும் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. 

Input & Image courtesy:Zee news

 


Tags:    

Similar News