இந்தியாவில் நிறுவனத்தை துவங்கிய எலான் மஸ்க்: கிராமப்புறங்களில் கவனம் செலுத்துமா ஸ்டார்லிங்க்?

இந்தியாவில் நிறுவனத்தை துவங்கி எலான் மஸ்க் அவர்களின் ஸ்டார் லிங்க் நிறுவனம் கிராமப்புறங்களில் கவனம் செலுத்த உள்ளதாம்.

Update: 2021-11-02 13:59 GMT

தற்பொழுது உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரான விளங்கும் எலான் மஸ்க் கீழ் இயங்கி வரும் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் வாயிலாக இயங்கும் பிராட்பேன்ட் சேவையான ஸ்டார்லிங்க்-ஐ மக்களுக்கு விரைவில் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவில் தனது SpaceX-ன் கிளை நிறுவனத்தை துவங்க முடிவு செய்துள்ளது. மேலும் இது போல் தான் இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக டெஸ்லா கிளை நிறுவனம் இந்தியாவில் துவங்கப்பட்டது. தற்போது SpaceX-ன் கிளை நிறுவனமும் இந்தியாவில் துவங்கப்படுகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் கிராமப்புறங்களின் தங்களுடைய அதிக கவனத்தை செலுத்தும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


எலான் மஸ்க் இந்தியாவில் பிராட்பேன்ட் சேவையில் மாபெரும் புரட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயற்கைக்கோள் உடனான நேரடியான இணைப்பில் இயங்கும் ஸ்டார்லிங்க் பிராட்பேன்ட் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறது. ஸ்டார்லிங்க் பிராட்பேன்ட் இதற்கான முதற்கட்ட ஒப்புதலை மத்திய டெலிகாம் துறை தற்பொழுது அளித்துள்ள நிலையில், இந்தியாவில் டிசம்பர் 2022க்குள் 2 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஸ்டார்லிங்க் பிராட்பேன்ட் சேவையை அறிமுகம் செய்ய ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதற்கு இறுதி ஒப்புதல் பெற வேண்டும்.


 ஸ்பைஸ்எக்ஸ் இந்த இலக்கை உரிய நேரத்தில் அடைய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் Starlink Satellite Communications Private Limited என்னும் நிறுவனத்தை நவம்பர் 1ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் துவங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் 100% பங்குகளையும் ஸ்பேஸ்எக்ஸ் நேரடியாக வைத்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் சேவை தலைவர் சஞ்சய் பார்கவா இதுபற்றி கூறுகையில், "தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக Starlink Satellite Communications Private Limited நிறுவனம் துவங்கப்பட்டு உள்ள நிலையில் டெலிகாம் சேவை அளிப்பதற்கான உரிமங்களைப் பெற விண்ணப்பம் செய்ய முடியும். வங்கி கணக்குகளைத் துவங்க முடியும்" என்று இந்திய ஸ்டார்லிங்க் சேவை தலைவர் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: Livemint


Tags:    

Similar News