ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயத் திட்டத்தின் நோக்கம் என்ன?

இந்திய பொருளாதாரத்தில் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணய திட்டங்கள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும்?

Update: 2022-02-09 14:24 GMT

 உலக அளவில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளில்கூட இத்தகைய கரன்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் அப்பொழுதுதான் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் கூட கிரிப்டோகரன்சி களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு நோய் தொற்றுக்கு பிறகு உயர்ந்துள்ளது. மேலும் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் பெரும்பாலான மக்கள் கிரிப்டோகரன்சிகளிலும் முதலீடுகளை அதிகரிக்க ஆரம்பித்தனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக டிஜிட்டல் நாணயங்களை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். 


இதற்காக மத்திய அரசாங்கம் CBDC என்று அழைக்கப்படும் சென்ட்ரல் பாங்க் ஆஃப் டிஜிட்டல் கரன்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி இதில் உள்ள தொழில்நுட்பத்தைப் பற்றி தற்போது ஆராய்ந்து வருகிறது. அரசாங்கம் ஏன் CBDC ஐ அறிமுகப்படுத்துகிறது? புதிய பணவியல் முறைக்கு மாறுவதில் என்ன ஆபத்துகள் இருக்கும்? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் இந்திய மக்கள் மனதில் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் ஒவ்வொரு அமைப்புகளையும் கண்காணிக்கவும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் மிகப்பெரிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் டிஜிட்டல் நாணயம் திட்டங்கள் குறித்த முடிவை எடுப்பதற்கு இந்த அமைப்பை மத்திய அரசாங்கம் ஏற்படுத்தியது. 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) அறிமுகப்படுத்துவதாகவும், டிஜிட்டல் ரூபாய் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு 'பெரிய ஊக்கத்தை' அளிக்கும் என்றும் அறிவித்திருந்தார்.


2022-23 முதல், நாணயத்தை வெளியிட, பிளாக்செயின் போன்ற தொழில்நுட்பங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ரிசர்வ் வங்கி, ஜூலை 2021 இல், CBDC இன் 'கட்டமாக செயல்படுத்துவதற்கான' பணிகளை விரைவில் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் நாணயங்களை இந்தியாவின் சார்பாக வெளியிட பட்டால், உலக நாடுகளுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இந்தியா விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News