சரிந்து வரும் சரக்கு ஏற்றுமதி - மத்திய அரசு கொடுத்த அட்வைஸ் என்ன?
அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கையில், பணவீக்கம் வீழ்ச்சியின் காரணமாக ஏற்றுமதி அதிகரிக்க முடிவு.
2022-23 நிதியாண்டில் இந்தியாவின் கணிக்கப்பட்ட 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சியானது, ஜூலை 2022ல் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தற்போது அது வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக சரக்கு ஏற்றுமதிகள் மற்ற நாடுகளின் போர் போன்ற பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஏற்றுமதியின் அளவு குறைந்ததன் பெயரில் இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய அரசாங்கம் அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளது.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி முந்தைய ஆண்டில் $330 பில்லியனாக இருந்த நிலையில் FY22 இல் இதுவரை இல்லாத அளவுக்கு $422 பில்லியனாக உயர்ந்துள்ளது. இருப்பினும் ஜூலை, 2022 இல் ஐந்து மாதங்களில் குறைந்த அளவாகக் குறைந்துள்ள சரக்கு ஏற்றுமதிகள், தற்போது மீண்டும் உயரவில்லை என்றால் ஜூலை மாதத்திற்கான பொருளாதார மதிப்பீடும் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் மத்திய அரசாங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது இதற்கு ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய பொருட்களின் மதிப்பீட்டில் பல்வேறு வகைகளில் உயர்த்த வேண்டும் என்றும் என்றும் கூறியுள்ளார்கள்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக முன்னேறிய பொருளாதாரங்களில் மந்தநிலை கவலைகள் மற்றும் சீனாவின் மந்தநிலை ஆகியவை 2022-23 இல் ஏற்றுமதி பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மந்தமான ஏற்றுமதிகள் இந்தியாவின் உற்பத்தித் துறையின் செயல்திறனை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி வளர்ச்சியின் காரணமாக 2022 நிதியாண்டில் வளமாக இருந்த இந்திய உற்பத்தித் துறையானது, 2023ஆம் நிதியாண்டில் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்படும் சரிவால் பாதிக்கப்படும் என்று இந்திய மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சியின் அறிக்கை இந்த வாரம் தெரிவித்துள்ளது.
Input & Image courtesy:News