பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 5 ஆம் இடத்தில் முன்னேறிய இந்தியா - மிகப்பெரிய பொருளாதாரம்!
மிகப்பெரும் பொருளாதார நாடான பிரிட்டனை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் இடத்தில் முன்னேறிய இந்தியா.
இந்திய பொருளாதாரம் ஆனதும் தற்போது உலக நாடுகளின் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் டிஜிட்டல் பயணமானது இதற்கு ஒரு திருப்பு முனையாகவும் அமைந்துள்ளது. மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் கூட தற்போது மின்னணு பரிமாறு பரிமாற்றத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் எனவே இந்திய பொருளாதாரம் ஆனது தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதரமாகவே இருந்து வருகின்றது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளின் பட்டியலை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டு வருகின்றது.
தற்போது இந்த பட்டியலில் காலனி ஆதிக்க நாடான பிரிட்டனை தற்போது பின்னுக்கு தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருப்பது மக்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. பொருளாதார அளவில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டாக தான் இந்த ஒரு அறிக்கையை முடிவு வெளிவந்து இருக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முதல் நான்கு இடங்களில் கைப்பற்றியது, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் கைப்பற்று இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக கடந்த வருடம்(2021) பிரிட்டன் இருந்து வந்தது. ஆனால் பிரிட்டனின் தற்போதைய பொருளாதார நிலைமை 816 ட்ரில்லியன் டாலராக உள்ளது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் தற்போது 854.7 டிரில்லியன் டாலராக வளர்ச்சி அடைந்துள்ளது.
Input & Image courtesy: Polimer news