சீனாவை விட்டு இந்தியாவிற்கு திரும்பும் உலக நிறுவனங்கள்: மத்திய நிதி அமைச்சர்!

சீனாவில் இருந்து தன்னுடைய உற்பத்தி நடவடிக்கை அனைத்தையும் இந்தியாவிற்கு மாற்ற உலக நாடுகள் விரும்புகின்றன.

Update: 2022-09-15 08:14 GMT

நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த விரும்புவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருக்கிறார். அதாவது இந்தியாவில் முதலீடு செய்வதற்கு தேவையான திட்டங்களை வழங்குவதற்கும் தொழில்துறைக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் செய்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.


இந்தியாவில் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக உற்பத்தி இணைக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு சலுகைகளை மத்திய அரசாங்கம் வழங்கி வருவதாகவும் நிதியமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இந்திய உற்பத்திகளில் முதலீடு செய்வதற்கு பெரும் அளவில் பெரிய நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. முதலீட்டாளர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள இதர உற்பத்தியாளர்களையும் அவர்கள் அதிகமாக நம்புகிறார்கள். இதன் காரணமாக இங்கு முதலீடு செய்வதற்கு அவர்கள் தங்களுடைய ஆதரவை தருகிறார்கள்.


இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றி அவர்கள் பேசுகையில், பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை சீனாவிற்கு வெளியே நகர்த்த விரும்புவதாகவும், மேலும் சீனாவிற்கு பதிலாக இந்தியாவை அவர்கள் தேர்ந்தெடுப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக ஆட்டோ மொபைல்ஸ், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி தொழில்கள், வேதியல் பொருட்கள் போன்றவற்றை இந்தியாவில் அவர்கள் தங்களுடைய முதலீடுகளை முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy:news

Tags:    

Similar News