UPI பரிமாற்ற கட்டணம் வசூலிக்க எண்ணம் இல்லை - நிதியமைச்சர் விளக்கம்!

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று நிதியமைச்சர் கூறுகிறார்.

Update: 2022-08-28 02:41 GMT

இந்தியாவில் முதல்முறையாக யுபிஐ சேவை வசதி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் அவர்களால் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் தொடங்கப்பட்ட இந்த UPI தேவை தற்போது பல்வேறு மக்கள் அன்றாட பயன்படுத்தும் ஒரு பண பரிமாற்ற டிஜிட்டல் சாதனங்மாகவே மாறிவிட்டது. பல்வேறு டிஜிட்டல் சூழ்நிலைகளுக்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துச் செல்லாமல் நம்முடைய செல்போன் வழியாக UPI பரிவர்த்தனை சேவை என்பது இந்தியா முழுவதும் தற்போது மிகப் பிரபலமடைந்து உள்ளது.



இத்தகைய டிஜிட்டல் பண்ண பரிவர்த்தனைக்காக பயனாளரிடம் எந்த கட்டணமும் UPIயை வசூல் செய்வது கிடையாது என்பது இதில் உள்ள சிறப்பு அம்சம். இதனால் ஏழை எளிய மக்களும் இதற்றை பயன்படுத்தி பலன்களை பெற்று வந்தார்கள். ஆனால் தற்போது UPI பண பரவர்த்தனைகளுக்கு கட்டண வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகி அது பெரும் பரபரப்பை மக்களிடம் ஏற்படுத்தியது. பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி ஏற்கனவே பங்குதாரர்களிடம் கருத்து கணிப்பு நடத்தி இருக்கிறது.


ஆனால் அரசின் தரப்பில் இருந்து பணப்பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க எந்த திட்டமும் இல்லை என்பதை நிதி அமைச்சகம் ஏற்கனவே வெளிப் வெளிப்படுத்தி இருந்தது. ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "டிஜிட்டல் பரிவர்த்தனை மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் மையம் ஆக்குவது காண ஆர்வத்தை ஏற்படுத்தும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பான முடிவு எடுப்பது இது சரியான நேரம் அல்ல. தற்போது உள்ள சூழ்நிலையில் இதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News