பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.10,000 கோடி அபராதம்: அமலாக்க துறை நோட்டீஸ் !

விதிகளை மீறியதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தின் 10,000 கோடி அபராதம்.

Update: 2021-08-05 13:58 GMT

இந்தியாவின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட் நிறுவனம், மற்ற நிறுவனங்களான அமேசான் மற்றும் ஜியோ மார்ட் உடன் கடுமையாக போட்டிபோட்டு வருகிறது. சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் எனவும், புதிதாக வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் எனப் பல புதிய பிரிவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வருகிறது. இந்த நேரத்தில் அமலாக்க துறையின் ஷோகாஸ் நோட்டீஸ் இந்நிறுவன வளர்ச்சிக்குத் தடையாகவும், முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய பிரச்சனையாகவும் வெடித்துள்ளது. 


அமலாக்க துறை பல வருடங்களாகப் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் தங்கள் இந்திய வர்த்தகத்திற்குச் செய்து வரும் அன்னிய முதலீடுகள் கூர்ந்து கவனித்து வருகிறது. மல்டி பிராண்ட் ரீடைல் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மல்டி பிராண்ட் ரீடைல் மற்றும் விற்பனையாளர்கள் நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் வாயிலாகப் பல முறைகேடுகள் விதிமீறல்களைச் செய்துள்ளது அமலாத்ததுறை தற்பொழுது கண்டுபிடித்துள்ளது. 


அந்த பக்கத்தில் தற்போது பிளிப்கார்ட் ஈர்த்து வரும் அன்னிய முதலீட்டில் விதிமீறல்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதன் கூட்டணி விற்பனை நிறுவனமான WS ரீடைல் நிறுவனம் ஈகாமர்ஸ் தளத்தில் செய்து வரும் வர்த்தகம் இந்திய வர்த்தகச் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டது என்றும் அமலாக்க துறை குற்றம்சாட்டியுள்ளது எனச் சில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1.35 பில்லியன் டாலர் அபராதம் இந்த விதிமீறல்களுக்காக அமலாக்கத் துறை சுமார் 1.35 பில்லியன் டாலர் அளவிலான அபராதம் விதித்தது. இதைச் செலுத்தத் தவறிய காரணத்தால் தற்போது அமலாக்க துறை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு 10,000 கோடி ரூபாய் வரை தற்போது அபராதமாக விதித்துள்ளது. மேலும் 1.35 பில்லியன் டாலர் அளவிலான அபராதம் குறித்தும் நேரில் வந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input: https://myindianews.com/flipkart-and-founders-may-be-fined-rs-10000-crore-ed-warns/

Image courtesy: myinida news 


Tags:    

Similar News