இந்தியாவில் GDP விகிதம் நடப்பு ஆண்டில் 9.5 சதவீதமாக இருக்கலாம்: SBI கணிப்பு !
இந்தியாவின் GDP விகிதம் நடப்பு ஆண்டில் சுமார் 9.5% வளர்ச்சி காணலாம் என்று SBI ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தற்பொழுது GDP விகிதமானது 8.4% ஆக வளர்ச்சி கண்டுள்ள நிலையில், SBI-யின் இந்த கணிப்பு வந்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் 20.1% ஆகவும் தற்பொழுதும் வளர்ச்சி கண்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த RBI கூட்டத்தில், நடப்பு நிதியாண்டின் GDP விகிதத்தினை 9.5% ஆக முன்னர் கணித்திருந்தை அப்படியே வைத்துள்ளது. இதில் எந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாத வகையில் SBIயின் ஆய்வு முடிவும் இதனையே கூறி உள்ளது. 4-வது காலாண்டில் வளர்ச்சி விகிதம் சாதகமாக இருக்கும் பட்சத்தில், ரிசர்வ் வங்கியின் கணிப்பினை விட ரியல் GDP விகிதமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபடுவதாக SBI சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த விகிதமானது குறிப்பாக, சுரங்கம் மற்றும் குவாரி, பொது நிர்வாகம், மற்ற சேவைகளில் வளர்ச்சி விகிதமானது இரட்டை இலக்கில் உள்ள நிலையில், இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் 8.4% எட்டியுள்ளது. இது GDP-யினை விட அதிகமாகும். வளர்ச்சி பாதையில் இந்தியா 2021ம் நிதியாண்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நோய் தொற்று பரவல் காரணமாக பல்வேறு துறைகளில் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் GDP-யில் 11.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பினை அடைந்துள்ளது. எனினும் நடப்பு நிதியாண்டில் நிலைமை மாறுபட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ரியல் GDP-ல் 8.2 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. சரிவில் உள்ள துறைகள் எப்படியிருப்பினும் கொரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, தற்போது 3.2 லட்சம் கோடி நஷ்டத்தில் தான் உள்ளது. குறிப்பாக ஹோட்டல்ஸ், டிரான்ஸ்போர்ட், கம்யூனிகேஷன் மற்றும் சேவைத் துறையில் வளர்ச்சி இன்று வரையில் பின் தங்கியுள்ளது. இந்த துறைகளில் மட்டும் 2.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படுள்ளது. தடுப்பூசியை அதிகமாக மக்கள் போட்ட பிறகு, பல்வேறு தொழில்கள் தற்போது பழைய நிலைமையை நோக்கி கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Livemint