இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட்: கிராமங்களுக்கும் சென்று அடையும் வகையில் UPI!
இந்தியாவின் UPI லைட் தற்போது கிராமங்கள் மற்றும் சிறு டவுனுக்கு சென்றடையும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
பெரும்பாலும் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட நடவடிக்கைகள் நகரங்களையும் மற்றும் பெருநகரங்களிலம் சார்ந்தே இயங்குகின்றன. இது இந்தியாவின் கிராமங்கள் மற்றும் சிறிய நகரப் பகுதிகள் இந்த வகையான டிஜிட்டல் நடவடிக்கைகளை செய்வதற்கு தற்போதும் போதுமான வகையில் இன்டர்நெட் வசதி இல்லாதது குறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த குறையை நிவர்த்தி செய்யுமாறு மத்திய அரசு தற்போது UPI lite என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் NPCI அமைப்பு UPI lite என்ற புதிய சேவை தளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி இந்தியாவில் ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கான கட்டமைப்பு மற்றும் விதிமுறைகளை வெளியிட்ட சில வாரத்தில் NPCI- UPI lite என்ற புதிய ஆப்லைன் பேமெண்ட் சேவை தளத்தைச் சோதனை செய்யத் துவங்கியுள்ளது. மேலும் இந்த பேமென்ட் தளம், BHIM, கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற UPI செயலிகளைப் போலவே இந்த யூபிஐ லைட் தளம் இண்டர்நெட் இல்லாமல் இயங்க கூடியவை என்பது தான் மற்றொரு சிறப்பம்சம்.
UPI lite தளத்தில் அதிகப்படியாக ஒரு பேமெண்ட்-க்கு 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையில் பேமெண்ட் செய்ய முடியும். இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு எவ்விதமான இண்டர்நெட் இணைப்பும் தேவையில்லை. இத்தகையை ஆப்லைன் பேமெண்ட் முறை இண்டர்நெட் இல்லாத அல்லது குறைவாக உள்ள அனைத்து இந்திய கிராமம் மற்றும் சிறிய டவுன் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் சேவையை கொண்டு செல்ல இந்த ஒரு செயலி மிகவும் உதவியாக இருக்கும்.
Input & Image courtesy: Livemint