புதுப்பிக்கத்தக்க கூடிய ஆற்றல் வளங்களில் இந்தியா செலுத்தும் புதிய பார்வை !

புதுப்பிக்கத்தக்க வளங்களின் மீது இந்திய முயற்சி செய்தால் இத்தகைய பலன்களை பெறலாம்.

Update: 2021-12-12 13:59 GMT

மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க கூடிய வளங்கள் மீது பல்வேறு கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவற்றை சார்ந்தே அமைந்துள்ளது. நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட்ஸ் அளவுக்கு உயர்த்த திட்டமிடப் பட்டுள்ளது. அந்த வகையில் அரசின் இலக்கான 500 ஜிகா வாட்ஸினை 2030க்குள் இந்தியா அடைந்து விட்டால், இந்தியா பல்வேறு பலன்களை அடையும் என அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்று சுட்டி காட்டியுள்ளது.


2030-குள் இந்தியா தன்னுடைய இலக்கினை அடைந்து விட்டால் நிச்சயம் பெரிய பயன்களை அடையும். காரணம் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் மூலமாக பெரும்பாலான மின்சார செலவுகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கவனிக்க வேண்டியவை அரசின் இந்த இலக்குக்கு மத்தியில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. அது பேட்டரிகளின் செலவினங்கள், விண்ட் மற்றும் சோலார் எனர்ஜி டெக்னாலஜி தொடர்பான செலவினங்கள், கடந்த தசாப்தத்தில் இருந்ததை போல இருக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள அனல் மின் நிலையங்களையும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பல விஷயங்கள் உள்ளன.


இவ்வாறு 2030-குள் அரசு இலக்கினை எட்டினால் 2020-ல் 25% ஆக உள்ள கார்பன் உமிழ்வு இல்லாத ஆற்றம், 2030-ல் 50% ஆக அதிகரிக்க கூடும் என்று ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. எனினும் புதுப்பிக்கக் கூடிய பழங்களுள் ஒன்றான சோலார் திட்டத்தை பொறுத்தவரையில், முன்பாக சோலார் உபகரணங்கள் இறக்குமதிக்கான கட்டணங்கள், ஒழுங்கற்ற நிதி ஓட்டம், நிலம் பற்றாக்குறை மற்றும் மின்சார விநியோக நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமையை, இந்தியா கவனிக்காவிட்டால் இந்த இலக்குகள் எட்டப்படாமல் போகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Input & Image courtesy: Hindustantimes




Tags:    

Similar News