GST பிட்மென்ட் கமிட்டியின் பரிந்துரை: மாற்றங்களை எதிர்நோக்கும் வரி விகிதங்கள் !

கமிட்டியின் பரிந்துரையின் கீழ் தற்பொழுது முக்கியமான GST வரிகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப் படுகிறது.

Update: 2021-11-24 13:00 GMT

தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து அதிகப்படியான விலையை குறைத்த போது சாதாரணமாக மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தற்போது அரசுக்கு கூடுதல் வரி வருமானத்தை பெற்று தரும் வகையில் ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டி முக்கியமான பரிந்துரையை நிதியமைச்சகத்தின் முன் வைத்துள்ளது. GST வரி விதிப்பில் அதிகப்படியான பிரச்சனைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இதை சரி செய்யவும், வரிகளை இணைக்கும் முக்கிய பணியை மத்திய நிதியமைச்சகம் மற்றும் மத்திய அரசு இணைந்து GST பிட்மென்ட் கமிட்டிக்கு கொடுத்தது.


GST பிட்மென்ட் கமிட்டி தற்போது 5 சதவீத GST வரியை 7 சதவீதமாகவும், 18 சதவீத GST வரியை 20 சதவீதமாக உயர்த்தவும், 12 மற்றும் 18 சதவீத GST வரியை இணைத்து 17 சதவீதம் என்ற புதிய GST வரி பலகையை கொண்டு வரவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி வரி இதுமட்டும் அல்லாமல் இழப்பீடு விகிதத்தை 1 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதம் வரையில் உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான GST வரியை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


GST வரி பலகை மற்றும் GST வரி இணைப்பு ஆகியவற்றை குறித்து GST பிட்மென்ட் கமிட்டி கொடுத்த பரிந்துரையை ஆய்வு செய்து GST கவுன்சில் உருவாக்கிய அமைச்சர்கள் குழு(GoMs) ஆய்வு மற்றும் ஆலோசனை செய்து அறிக்கையை GST அமைப்பிடம் கொடுக்க உள்ளது. நவம்பர் 27 ஆய்வு கூட்டம் GST பிட்மென்ட் கமிட்டி கொடுத்த பரிந்துரையை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு (GoMs) வருகிற நவம்பர் 27ஆம் தேதி கூட உள்ளது. மேலும் GST கவுன்சில் அடுத்த கூட்டம் டிசம்பர் மாதம் நடக்க உள்ளது.

Input & Image courtesy:Times of India


Tags:    

Similar News