கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு எகிறிப் பாய்ந்த ஜி.எஸ்.டி வசூல்

நான்காவது முறையாக ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூபாய் 1.60 லட்சம் கோடியை தாண்டியது.

Update: 2023-07-03 12:00 GMT

கடந்த 2017- ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் கடந்த ஜூன் மாதம் நான்காவது முறையாக ஜி.எஸ்.டி வசூல் ரூபாய் 1.60 லட்சம் கோடியை கடந்து ரூ.1.61 லட்சம் கோடி வசூலாகுள்ளது. கடந்த 2022-23 ஆம் நிதி ஆண்டு முதல் காலாண்டில் மாதாந்திர மொத்த சராசரி ஜி.எஸ்.டி வசூல் ரூபாய் 1.51 லட்சம் கோடியாக இருந்தது. அது இந்த 2023- 24 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 1.69 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என மதிய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கடந்த ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் ஒரு 1, 61,497 கோடியில் மத்திய ஜி.எஸ்.டி ரூபாய் 31 ஆயிரத்து 13 கோடி, மாநில ஜி.எஸ்.டி ரூபாய் 38 ஆயிரத்து 292 கோடி , இறக்குமதி பொருட்கள் மீதான வரி ரூபாய் 39 ஆயிரத்து 35 கோடியுடன் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வசூல் ரூபாய் 80 ஆயிரத்து 792 கோடி இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட 1028 கோடி ரூபாய் உடன் கூடுதல் வரி ரூபாய் 11 ஆயிரத்து 900 கோடி.


இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜி.எஸ்.டி வசூல் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகமாகும். ஜூன் மாதத்தில் சேவை இறக்குமதி உட்பட உள்நாட்டு பரிமாற்றங்கள் வாயிலான வருவாய் இந்த வகையில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த வருவாயை விட 18 சதவீதம் அதிகம். கடந்த ஏப்ரலில் சாதனை அளவாக ரூபாய் 1.87 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி வசூல் ஆனது. அது மே மாதத்தில் ரூபாய் 1.57 லட்சம் கோடியாக இருந்தது. இவ்வாறு நிதி அமைச்சகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News