GST கவுன்சில் நடைபெறுவதற்கான நோக்கம்: கூடுதல் வரிவிதிப்பு தொடர்பான மாற்றங்கள்!
தற்போது நடைபெற்று வரும் 47வது சரக்கு மற்றும் சேவைகளுக்கான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.
திரு. நரேந்திர மோடி அவர்களின் முயற்சியினால் மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியை இந்தியா முழுவதும் அமல்படுத்தியது. மேலும் இது பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமான வருவாய்க் உருவாகும் விதமாகவும் இது அமைந்துள்ளது. மேலும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது மேலும் தற்போது நடைபெற்ற 47வது கூட்டமானது சட்டிஸ்கரில் நடைபெற்றுள்ளது.
GST வரிவிதிப்பு தொடர்பான வழிமுறைகள் பல்வேறு மாற்றங்களைக் கடந்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் GST கவுன்சில் கூட்டத்தில் GST பங்கீடு, கூடுதல் வரி விதிப்பு முதலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இரு அவைகளின் ஒப்புதல் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி என்பது கவுன்சிலிங் அடிப்படையில் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றது. மேலும் இந்த கவுன்சிலின் தலைவராக மத்திய நிதியமைச்சர் மற்றும் குழுவில் உறுப்பினர்களாக மாநில நிதி அமைச்சர்கள் இடம்பெற்று உள்ளார்கள்.
GST குழுவில் எடுக்கப்படும் வரிவிதிப்பு மாற்றங்கள் அந்த வருடங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதே மாதிரி இந்த வகையில் தற்போது ஆன்லைனில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் மற்றும் குதிரை பந்தயம் முதலியவற்றில் காண சரக்கு மற்றும் சேவை வரி 28% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இதற்கான முடிவு தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Input & Image courtesy: ABP News