இரண்டாவது முறையாக இலக்கை அடைந்தது GST வரி வருவாய்: மத்திய அமைச்சகம் தகவல் !

ஆகஸ்ட் மாதம் GST வரி வருவாய் ரூ.1.12 லட்சம் கோடி வசூல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-02 14:01 GMT

இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியை (GST) மத்திய அரசால் அமல்படுத்தப் படுத்தப்பட்டது. GSTயின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இந்த இலக்கை அடைவது ஒவ்வொரு மாதமும் பெரும் சிரமமாக இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் கொரோனா வந்த பிறகு GST வரி வசூல் பெரும் பாதிப்பைச் சந்தித்து, இலக்கை அடைவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது.  


இந்நிலையில், மத்திய அரசுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக தொடர்ந்து இரண்டாவது மாதமாக GST வசூல் இலக்கு எட்டப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் படி, 2021 ஆகஸ்ட் மாதத்தில் அரசின் GST வசூல் ரூ.1.12 கோடியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2021 ஜூலை மாதத்தில் ரூ.1.16 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வசூல் கிடைத்துள்ளது.


2021 ஆகஸ்ட் மாதத்தில் கிடைத்த ரூ.1.12 லட்சம் கோடி GST வசூலில், மத்திய CGST ரூ.20,522 கோடியும், SGST ரூ.26,605 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த GST-யின் கீழ் இறக்குமதிக்கான ரூ.26,884 கோடி உட்பட மொத்தம் ரூ.56,247 கோடி கிடைத்துள்ளது. செஸ் வரியாக ரூ.9,525 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் அடுத்து வரும் மாதங்களிலும் GST வரி வருவாய் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Input:https://m.timesofindia.com/business/india-business/gst-revenue-collection-for-august-at-over-rs-1-12-lakh-crore-for-second-straight-month/amp_articleshow/85829585.cms

Image courtesy:times of India


Tags:    

Similar News