இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: மத்திய உள்துறை அமைச்சர் கருத்து!
இந்த நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை தற்பொழுது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியா இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் நிறுவனங்கள் நிதியுதவியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
FICCI இன் தொழில்துறை அமைப்பின் 94 வது ஆண்டு மாநாடு மற்றும் AGM-இன் தொடக்க விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் இதுபற்றி கூறுகையில், "நாங்கள் நோய்தொற்று வருவதற்கு முன்பு இருந்த நிலைகளை அடைந்து வருகிறோம். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான GDP எண்ணிக்கை 8.4 சதவீதமாக உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறும் என்று நான் நினைக்கிறேன். இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
பொருளாதாரத்தின் 22 அளவீடுகளில் தற்பொழுது இந்தியா 19 அளவீடுகளை தாண்டி உள்ளது. இது நாடு வலுவாக வந்திருப்பதைக் காட்டுகிறது" என்றும் அவர் கூறினார். உற்பத்தி மற்றும் சேவைத் துறை குறியீடுகள் இரண்டும் கொரோனாவுக்கு முந்தைய நிலைகளை எட்டியுள்ளன என்றார். இந்த நோய் தோற்று காலத்தில் மத்திய அரசாங்கம் பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி உள்ளது என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.
Input & Image courtesy:Hindubusinessline