பொருளாதாரம் மற்றும் 3வது கொரோனா அலை: மீண்டும் முடக்கம் ஏற்படுமா?

மூன்றாவது கொரோனா அலை காரணமாக மீண்டும் பொருளாதாரம் முடக்கம் ஏற்படுமா?

Update: 2022-01-07 13:15 GMT

இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்பொழுது கொரோனா மூன்றாவது அலை, 2022 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் அதிக கவனம் தேவைப்படும் ஒரு சூழ்நிலையாக உருவெடுத்து வருகிறது. காரணம் நாளுக்கு, நாள் நோய் தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும், இந்த ஒரு சூழ்நிலையில் பொருளாதாரம் வீழ்ச்சி அடையத் தொடங்கி இருக்கிறது. இந்த வகையான முடக்கம், இந்தியாவின் பொருளாதார மீட்சியானது புதிய ஆண்டின் தொடக்கத்தில் நுட்பமாக உள்ளது.


மேலும்  எட்டு முக்கிய துறைகள் நவம்பரில் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. GST இழப்பீடு செஸ் வருவாய் நவம்பரில் உச்சத்தை தொட்டது. ஆனால் சுங்க வரி வசூல் ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது. மேலும் சமீபத்திய வைரஸ் அலைகள் மீண்டும் இயல்பு நிலையை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த ஆய்வில் முடிவில், டிசம்பரில் உற்பத்தி மற்றும் சேவைகள் வேலை இழப்புகளை அறிவித்தன.  


கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நோய் தொடர்புக்கு இடையில் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்கள் அனைவரும் தடுப்பூசியை சரியான நேரத்தில் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள். அதே போல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவற்றின் அளவு மற்றும் தாக்கம் இந்த கட்டத்தில் நிச்சயமற்றதாக இருந்தாலும் கூட, அதிகமான இடையூறுகளின் வாய்ப்பு பெரியதாக உள்ளது. தற்போதைய மூன்றாவது அலையை சமாளிக்க இன்னும் சிறப்பான முறையில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கடந்த அலைகளில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடத்தை மறக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  

Input & Image courtesy: The Hindu




Tags:    

Similar News