கிரிப்டோகரன்சி குறித்து தனது கருத்தை கூறிய IMF பொருளாதார நிபுணர் !
கிரிப்டோகரன்சி குறித்த தன்னுடைய கருத்தை கூறிய IMF இன் பொருளாதார நிபுணர்.
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) துணை நிர்வாக இயக்குனராக இந்தியா வம்சாவாளியைச் சேர்ந்த கீதா கோபி நாத் நியமனம் செய்யப்படவுள்ளார். தற்பொழுது IMF- பின் பொருளாதார நிபுணராக இருந்து வரும் கீதா கோபிநாத், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக் கிழமையன்று சந்தித்து பேசினார். சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய துணை நிர்வாக இயக்குனராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் தான் கீதா கோபி நாத்துக்கு பதவி உயர்வி கொடுக்கப்பட்டுள்ளது. நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எக்னாமிக் ரிசர்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய கீதா கோபி நாத், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் கிரிப்டோகரன்சியை தடை செய்வதற்குப் பதிலாக அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் உலகளாவிய கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எல்லை தாண்டி செல்லலாம் எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் தாங்களாகவே இந்த சிக்கலை தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார். ஏனெனில் கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைகளை எல்லை தாண்டிச் செல்ல முடியும். அதற்கு அவசரமாக உலகாளாவிய கொள்கை தேவை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே உலக நாடுகள் கிரிப்டோகரன்சி குறித்த உலகளாவிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Input & Image courtesy: India Today