கிரிப்டோகரன்சி குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் RBI !
கிரிப்டோகரன்சி குறித்த முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ள ரிசர்வ் வங்கி.
கிரிப்டோகரன்சி பல்வேறு நாடுகளில் இது பற்றி விவாதித்து வரும் சூழ்நிலையில், இதன் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் அதே வேளையில் பலதரப்பும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றன. குறிப்பாக இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி குறித்தான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் தான் இந்திய அரசு கிரிப்டோகரன்சியை ஒழுங்குமுறைப்படுத்த மசோதாவை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் RBI டிஜிட்டல் நாணயம் மற்றும் தனியார் கிரிப்டோகரன்சிகள் தொடர்பாக விவாதித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிரிப்டோகரன்சி குறித்த சட்டத்தை கொண்டு வர அரசு முன் வந்துள்ளது. தற்போது நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்து பரிசீலிக்கலாம். கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதா 2021 தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது. எனினும் சில தகவல்கள் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அப்படி ஏதும் நிகழ வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் 592-வது கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி குழு டிஜிட்டல் நாணயம் மற்றும் தனியார் கிரிப்டோ நாணயம் தொடர்பான பல்வேறு அம்சங்களையும் விவாதித்தது. மேலும் இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்து பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy:Economictimes